--- --:--:-- --

தமிழகத்தில் ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா உறுதி.. 303 பேர் பலி!

IMG_20210515_203356

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

 

அதன்படி, தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 035  ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா தொற்றிற்கு அரசு மருத்துவமனைகளில் 178 பேரும், தனியார் மருத்துவமனையில் 125 பேரும் என 303 பேர் உயிரிழந்துள்ளனர்

 

தமிழகத்தில் தற்போது  2,07,789  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 20,905  பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13, லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.

 

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று மேலும்  6640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon