--- --:--:-- --

கோவை : கஞ்சா விற்ற 3 பேர் கைது !!!

15

கோவை போத்தனூர் போலீசார் பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும்,அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

தொடர்ந்து போலீசார் போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த ஹரிதாசை கைது செய்து 1.250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிங்காநல்லூர் போலீசார் நெசவாளர் காலனியில் நேற்று ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (51), என்பவரை கைது செய்தனர்.

 

அவரிடமிருந்து 2.750 கிலோ கிராம் கஞ்சா ரொக்கம் ரூபாய் 790, பறிமுதல் செய்தனர். கோவையை அடுத்த காரமடை திம்மம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்றதாக உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் (46) என்பவரையும் காரமடை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பள்ளி,கல்லூரி மாணவர்களிடையேபோதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதும்,போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon