--- --:--:-- --

கோவை : மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தில் நுழைந்த காட்டுயானைகள். பொதுமக்கள் அச்சம் !!!

14

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்,சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியினை விட்டு வெளியேறும் நிகழ்வு அதிகரிக்க துவங்கியுள்ளது.இரவில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், குடியிருப்புகள் நிறைந்த கிராம பகுதிகளுக்குள்ளும் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் நேற்று இரவு சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் மோத்தேப்பாளையம் கிராமத்தில் நுழைந்துள்ளது.இரவு வந்த யானைகள் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை நாசம் செய்ததுடன் கிராமங்களுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மோத்தேப்பாளையம் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைய வந்த யானைகளை அந்த வீட்டின் உரிமையாளர் கத்தி கூச்சல் போட்டதை அடுத்து அந்த யானை கூட்டம் அங்கு இருந்து சென்றது.இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த காட்சிகள் அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சமீப நாட்களாக இப்பகுதிகளில் காட்டு யானைகள்,சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon