கிரிக்கெட் ஆட்டத்தால் வெடித்த மோதல்.. கட்டையால் சரமாரி தாக்குதல்..!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூரில் கிரிக்கெட் விளையாடிய பொழுது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சபேரியா தெரு நந்தனார் தெருவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரு பிரிவுகளாக ஆத்தூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் வியாழன் அன்று மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது போட்டியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டதால் பரபரப்பு நிலவியது.





