4 நாள் பயணமாக நாளை துபாய் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நாளை மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் கைத்தறி விவசாயம், சிறு தொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன.
ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் பொழுது முதலமைச்சருக்கு ஷார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதலீடுகளை ஈர்க்க மு க ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
அவருடன் மாநிலங்களவை உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் தனி செயலர், உதயச்சந்திரன் உள்ளிட்டோர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர்





