அரியர் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பதாக முதல்வர் அறிவிப்பு..!
கல்லூரி அரியர் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கு மட்டும் விலக்களித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது இறுதி பருவத்தேர்வு தவிர இதர பருவத் தேர்வுக்காக ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களுக்கு விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஏற்கனவே அரியர் வைத்த பாடங்கள் இறுதித் தேர்வாக இல்லாத பட்சத்தில் அந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மதிப்பெண் எப்படி வழங்கப்படும், யார் யாருக்கு தேர்ச்சி வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்களுடன் விரிவான அரசாணை உயர் கல்வித் துறையால் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.







