--- --:--:-- --

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் எப்போது..?

2

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். ரெமோ படத்தில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம்தான் சுல்தான். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

 

ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேசமயம் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்திற்காக தலைமுடி அதிகமாக வளர்த்துள்ளார். இதனால் சுல்தான் படத்தை முடிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது.

 

மீதமுள்ள படப்பிடிப்பை கொரொனா காலத்தில் எவ்வாறு முடிப்பது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம் என தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். அதேசமயம் படத்தின் ரிலீஸ் குறித்து எந்தவிதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon