--- --:--:-- --

பள்ளிகள் திறந்தும், கட்டணங்கள் கட்டியும் புத்தகங்கள் வரவில்லை..

100930_b1

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆக இருக்கும் நிலையில் இன்னும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என பள்ளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டும் பல பள்ளிகளில் இன்னுமும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 3,4,,5,10,12 ஆம் வகுப்பு புத்தகங்கள் கிடைக்கவில்லை என பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

1,6,9, 11 ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட்ட நிலையில் இதர வகுப்புகளுக்கு இந்த ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் கிடைக்காததால் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தெரிவித்து உள்ளனர். அதிகமான பாடங்களை கொண்ட புதிய பாடப்புத்தகம் ஒரு மாத காலம் ஆகியும் வழங்கப்படவில்லை என்றால் பாடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என கூறுகின்றனர் ஆசிரியர்கள்.

 

புத்தகங்களை விரைந்து மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்திய தனியார் பள்ளிகளுக்கு விரைந்து புத்தகங்களை அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புத்தகங்கள் கிடைக்காத பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள பாடபுத்தக மண்டல அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய ரசீதை காண்பித்து புத்தகங்களை பெற்று கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு பாட நூல் கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon