ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆவின் மேலாளர் கைது..!
நிலுவை தொகையை விடுவிக்க ஐம்பதாயிரம் ரூபாய் கையூட்டு பெற்ற ஆவின் மேலாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் துருஞ்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்து வருகிறார்.
இவருக்கு ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் நிலுவைத் தொகையை ஆவின் நிறுவனம் தர வேண்டியுள்ளது. இதுகுறித்து வேலூர் ஆவின் பால் உற்பத்தி மேலாளர் ரவி என்பவரிடம் கேட்டதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் நிலுவைத் தொகையை விடுவிப்பதாக கூறியதாக தெரிகிறது.
இதை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். முருகேசன் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை களவுமாக பிடித்து கைது செய்தனர்.







