கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ்க்கு ஆயுள் தண்டனை ..!
கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார், செவிலி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் இருவரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி கன்னியாஸ்திரி அவ்வையார் சந்தேகத்திற்கிடமான முறையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தற்கொலை என செய்தி வெளியான நிலையில் கோட்டையம் பொருளாதார குற்றப்பிரிவு துறையில் பலர் தற்கொலை என வழக்கை முடிவு செய்தனர்.
பின்னர் பல்வேறு தரப்பினரின் போராட்டங்களுக்குப் பிறகு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இருவரும் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின்படி பாதிரியார் தாமஸ் அவருக்கு உடந்தையாக இருந்த கம்மியா ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிரியார் தாமஸ் 6.5 லட்சம் ரூபாயும், கன்னியாஸ்திரி செவிக்கு 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு ஔவையாரின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலமானதில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.







