படக்குழுவில் 8 நபர்களுக்கு கொரொனா தொற்று..! ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
ரஜினிகாந்தின் அண்ணாத்த படக்குழுவில் 8 நபர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஜினிகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரொனா இல்லை என்று முடிவு வந்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 14ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. மேலும் படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்து படப்பிடிப்பில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்ணாத்த படக் குழுவில் பணியாற்றிய 8 நபர்களுக்கு நேற்று கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதுடன் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் ரஜினிகாந்திற்கு கொரொனா இல்லை என்று முடிவு வந்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.







