--- --:--:-- --

நடிகை சாந்தினியின் வாட்ஸ்அப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி..!

6

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையை தொடர்பு கொண்ட மர்மநபர் சிபிஐ அதிகாரி என கூறி மின்னஞ்சல் கடவுச்சொல்லை கேட்டதாகவும் வாட்ஸ்அப் டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாகவும் நடிகை மீண்டும் புகார் கூறியுள்ளார்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி கருவை கலைக்க செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கின் முக்கியமான ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர். இதனுடன் மேலும் சில ஆதாரங்களை நடிகை தரப்பில் காவல்துறை கொடுத்துள்ளனர்.

 

ஒரு மர்ம நபர் சிபிஐ இயக்குனர் என கூறி மின்னஞ்சல் மற்றும் கடவுச் சொல்லைக் கேட்டு நடிகைக்கு மெயில் அனுப்பியதாகவும், அதில் வாட்ஸ்அப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும் நடிகை புகார் அளித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon