அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ.. .!
இயக்குனர் அட்லீ தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறி இருக்கிறார். அவர் ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் படம் 1160 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து அட்லீ ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். “எனக்கு பாலிவுட் வர 8 ஆண்டுகள் ஆகிவிட்டது, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய அறிவிப்புடன் வருவேன், அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்” என அட்லீ கூறி இருக்கிறார்.
இந்திய பணக்காரரான அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ குடும்பத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் நடக்கும் திருமணத்தில் அட்லீ மனைவி மற்றும் மகன் உடன் சென்று இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. மகன் முகத்தை முதல் முறையாக மீடியா முன்பு அட்லீ ப்ரியா ஜோடி காட்டி இருக்கிறது என்பதால் வீடியோ வைரல் ஆகி வருகிறது.





