சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் தங்கம் கடத்தல்..!
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 161 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்பொழுது பயணி ஒருவர் உடலில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து 66 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,061 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





