மத்தியபிரதேசம் சென்றுள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவினர்..!
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக மத்தியபிரதேசம் சென்றுள்ளனர். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வந்த மணிரத்னம் தற்போது மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.
அவருடன் நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு இந்த மாத இறுதி வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் செப்டம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.






