--- --:--:-- --

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு..!

3

ரேஷன் கார்டு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் பலர் தனித்தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க வீடு வீடாகச் சென்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. தவறான தகவல்களை அளித்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் 34,793 நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இருப்பினும், பல லட்சம் பேர் இன்னும் தங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை.

 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,77,22,000 வேட்டிகளும், 1,77,64,000 சேலைகளும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஜனவரி 9 முதல் 13.1.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

இந்த பணியை சிறப்பாக மேற்கொள்ள சுமார் 50,000 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பொங்கல் வேட்டி, சேலைகளை இன்னும் பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் தற்போது மார்ச் 31 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Right Menu Icon