--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த லாரி இருசக்கர வாகன ஓட்டி மீது கவிழ்ந்து விபத்து..!

3

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அருகே அதி வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்ததில் வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லூருக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தில் உள்ள மதியழகன் என்பவர் சாத்தூரில் மாமனாரின் வீட்டில் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

 

கங்கைகொண்டான் அருகே வேகமாக வந்த லாரி தடுப்புகள் மீது மோதாமல் இருக்க டிரைவர் வாகனத்தை திருப்ப முயற்சி செய்தபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் லாரிகள் சிக்கிய மதியழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

Right Menu Icon