--- --:--:-- --

22 கோடிக்கு ஏலம் போன விண்வெளி வீரர் சட்டை..!

4

நிலாவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் விண்வெளி உடை 22 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வானவியல் மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் அப்பல்லோ 11 விண்கலத்தில் நிலவுக்கு அனுப்பியது.

 

இதற்காக ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பயணித்தனர். விண்கலம் தரையிறங்கியதில் ஆறு மணி நேரம் கழித்து விண்வெளியில் இருந்து இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலில் காலடி வைத்தார்.

 

இதனை பின் தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். இந்த நிலையில் நிலவில் இறங்கிய விண்வெளி சட்டை நேற்று ஏலம் விடப்பட்டது. அதில் 22 கோடியே 37 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

 

அவருக்கு தற்போது 92 வயதாகும் நிலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மறைந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon