தாய், தந்தையை இழந்த தேர்ச்சி பெற்ற கேரள மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாஸன்..!
தாய், தந்தையை இழந்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்ற கேரள மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாஸன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் தனது தாய், தந்தை உட்பட 24 உறவினர்களை கோபிகா ஏற்கனவே இழந்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு கோபிகா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
தேர்வு முடிவுகளின்படி அனைத்து பாடங்களிலும் ஏ ப்ளஸ் மதிப்பெண்ணுடன் சிறப்பான முறையில் கோபிகா தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இழப்பின் பெரு வலியை பொறுத்துக்கொண்டு உழைத்து சாதித்த கோபிகாவின் மனவலிமை போற்றுதலுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.






