குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 27 வயதான சிவா தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
அவரது மூன்றாவது அண்ணன் வீடு கட்டியதில் பணகஷ்டம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சிவா தனக்குரிய பங்கை விற்று பெற்றோருக்கு கொடுக்கும்படி வீடியோ பதிவு செய்து அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





