--- --:--:-- --

மாணவிகள் முன்பு பந்தா காட்ட நினைத்து போலீசிடம் சிக்கிய இளைஞர்..!

19

புதுச்சேரி சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையான காலாப்பட்டு பகுதியில் பள்ளி முடிந்து மாநகர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர் வாகனங்கள் அதிகம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை என்றும் பாராமல், மாணவிகள் முன்பு நடுரோட்டில் அமர்ந்து தண்டால் எடுத்தும், ரீல்ஸ் எடுத்தும் சென்றுள்ளார்.

 

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக போலீசாரிடம் கேட்ட பொழுது அந்த நபர் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் பிடிபட்டவுடன் காவல் நிலையத்தில் வைத்து தண்டால் எடுக்க வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon