உயிருடன் உள்ள பெண்ணை இறந்ததாக கூறி மோசடி..!
மருத்துவரை மிரட்டி பணம் பறித்ததாக பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நாஞ்சிகுளம் பகுதியில் முகமது அப்துல் காதர் என்பவர் மருத்துவராக உள்ளார்.
இவரிடம் கடந்த மாதம் 29ஆம் தேதி பாலசுந்தரி என்ற பெண்மணி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்களான வீரசேகர் மற்றும் முகேஷ் ஆகியோர் மருத்துவர் அளித்த சிகிச்சையால் அந்த பெண் உயிரிழந்ததாக மிரட்டி மருத்துவர் முகமது அப்துல் காதரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.
இதில் முகேஷ் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ளார். இதனிடையே மருத்துவர் அந்த பெண் நலமாக இருப்பதை அறிந்துள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





