உடல் எடையை குறைக்க முயன்ற பெண் திடீர் பலி..!
பிரேசிலில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மிலாடி என்ற இளம் பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மிக தீவிரமான சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்ததன் விளைவால் இளம் பெண் உயிரிழந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.





