அரசு பேருந்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்..!
திருச்சூரில் அரசு பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது. கேரளா மாநிலத்தில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்து ஓட்டுநர் ஓட்டி சென்றார். மருத்துவமனை சென்றாலும் நேரமின்மை காரணமாக மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பேருந்தில் ஏறி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.
குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது,





