மது போதையில் அவசர சிகிச்சை பிரிவு பொருட்களை சூறையாடிய நபர்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனைக்குள் போதையில் நுழைந்த நபர் அவசர சிகிச்சையில் இருந்த பொருட்களை சூறையாடினார்.
மருத்துவமனைக்குள் சத்தம் போட்டபடி நுழைந்து அங்கும் இங்கும் தாவி குதித்த நபர் திடீரென இருக்கைகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவசர சிகிச்சை பிரிவினர், மருத்துவர் உட்பட அனைவரும் அஞ்சி வருகின்றனர்.





