ஆற்றுப்பகுதிகளில் குளிக்க வேண்டாம் என கேரள வனத்துறை எச்சரிக்கை..!
கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் முதலை நடமாட்டம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் வெற்றிலை பாறை ஆகிய பகுதிகளில் முதலை நடமாட்டம் உள்ளதாகவும் ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை முதலை தாக்க வந்ததாகவும் தகவல் வெளியாகியது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கேரள மாநிலம் வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் எடுத்திருக்கும் வீடியோவில் முதன் முதலில் நடமாட்டம் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனால் வால்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று கேரள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.





