மாணவனும், மாணவியும் தற்கொலை முயற்சி..!
காய்ச்சலைப் போல தற்கொலையை சகஜமாக்கி வைத்துள்ளனர் 2k கிட்ஸ். எங்கு திரும்பினாலும் தற்கொலை. எதற்கெடுத்தாலும் தற்கொலை என இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது என சொன்னால் மிகையாகாது.
அதுபோலத்தான் அண்மையில் கடலூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றியத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் விஷம் குடித்து விட்டதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த மாணவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே அதே பகுதியில் இன்னொரு மாணவியும் விஷம் குடித்து விட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் அதிர்ந்தே போனார். மாணவி தனக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வருவதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதாகவும் உனக்கு முன் நான் இறந்து போகிறேன் எனக் கூறி மாணவர் விஷம் குடித்ததாகவும் அதை தொடர்ந்து மீதியிருந்த விஷயத்தை மாணவி குடித்ததாக தெரியவந்துள்ளது.
தகுந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் இருவரும் காப்பாற்றப்பட்டனர். சிறு தோல்வி ஏமாற்றத்தையும் தாங்கமுடியாமல் தற்கொலையை கையிலெடுக்கும் இளைய தலைமுறைகளின் போக்கு கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





