--- --:--:-- --

ரவி மோகன் உறவை முறித்துக் கொண்ட கெனிஷா..!

1

டிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

 

 

ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம்வருவது இணையத்தில் வைரலாகி வந்தது. குறிப்பாக, அண்மையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷா மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

 

 

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

 

 

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரவி மோகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஒரு தெரபிஸ்டாக மட்டுமே தான் உதவத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஏற்கனவே பெற்றோரையும், 18 வயதில் திருமணமாகி தனது கருவையும் இழந்த வலியைச் சுமக்கும் தான் ஒருபோதும் இன்னொருவர் குடும்பத்தைக் கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கடந்த சில நாட்களாகத் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களாலும், ஆன்லைன் கிண்டல்களாலும் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ள கெனிஷா, சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், தனது இசை மற்றும் சிகிச்சை பணிகளை முற்றிலுமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

 

 

அவரது இன்ஸ்டா பதிவில், நிஜமான அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் எனக்கு இடம் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ‘பொய்களும், வதந்திகளும் நிறைந்த இந்தச் சூழலில் உண்மையான அன்பிற்கு இடமில்லை’ என்று குறிப்பிட்டுள்ள கெனிஷா, ‘பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றது’ என கூறியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த சில நாட்களாகத் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களாலும், ஆன்லைன் கிண்டல்களாலும் மனமுடைந்து போனதே கெனிஷாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கெனிஷாவின் இந்த முடிவு, ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து விவகாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon