மே 26ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை..!
மே 26ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், மே 26ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வழக்கமாக, ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், மே 26ம் தேதியே தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





