--- --:--:-- --

உணவு தேடி காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த கரடி..!

2

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காவல் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தில் வழக்கம் போல் இரவு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தபொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் கரடி நுழைந்திருக்கிறது.

 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உணவை தேடி சுற்றிப் பார்த்த கரடி, சாலைக்கு வந்து வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்றது. இந்த பகுதிக்கு வருவது இதுவே முதன்முறை என்பதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

Right Menu Icon