மீண்டும் எனது உடலில் குடியேறுவேன் எனக்கூறும் நித்யானந்தா..!
உடலை விட்டு பிரிந்து ஆழ்ந்த சமாதியில் மகிழ்ச்சியாக உள்ளதாக விளக்கம் அளித்துள்ள நித்யானந்தா விரைவில் தனது உடலில் குடியேறி வழக்கமான வாழ்க்கையை மேற்கொள்வேன் எனக்கூறியுள்ளார். வழக்கம் போல வழக்குகளுக்கு பயந்து வெளிநாடுக்கு தப்பியோடிய சாமியார் நித்தியானந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
உடனே நித்யானந்தா மறுப்பு தெரிவித்ததாகவும் சமாதி நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட பதிவில் தான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் மேலும் அனைவரையும் இடத்தில் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.





