--- --:--:-- --

மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்..!

8

சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் நகைகளை திருடி விட்டுச் சென்ற நபர் மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வேப்பேரி, இ‌வி‌கே சம்பத் சாலையில் தொழிலதிபரான விகாஸ் என்பவர் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

 

இவரது 22 வயது இளைஞர் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

பணத்தை திருடிய கரன் தானே அத்தனை பொருட்களையும் திருடியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் தன்னிடமுள்ள தந்தையின் ரகசிய வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon