வடமேற்கு மாநிலங்களில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்..!
நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் நாளை முதல் வெப்ப காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, தென் மேற்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சில இடங்களில் 4 முதல் 9 ஆம் தேதி வரை இயல்பைவிட வெயில் அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் வெப்பம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த வெப்பம் நாளாக நாளாக அதிகரித்து ஏப்ரல் மாத இறுதியில் 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





