மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூஷன் மாஸ்டர்..!
மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூஷன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் டியூஷன் மாஸ்டர் லோகநாதன். தனது டியூஷனில் படித்த வந்த மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாஸ்டர் லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, லோகநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.





