--- --:--:-- --

பள்ளிகளில் பிரச்னைக்குரிய மாணவர்களை கண்டறிய அறிவுரை..!

6

ள்ளிகளில் பிரச்சினைக்குரிய மாணவர்களை கண்டறியுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தால் பயணிகளுக்கு தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதனால் சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன.

 

இந்நிலையில் பள்ளிகளில் பிரச்சினைக்குரிய மாணவர்களை கண்டறிய கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிரச்சினைக்குரிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து கண்காணிப்பதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

 

Right Menu Icon