வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட முதியவர்.!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்த பொழுது சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முதியவர் திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டார். இவரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த பொழுது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இவர் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





