தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 15 முதல் கட்டுப்பாடு..!
பிரான்சில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களை அதிபர் தரக்குறைவாக விமர்சித்து உள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரொனா வைரஸ் மீண்டும் கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களை அதிபர் தரக்குறைவாக விமர்சித்து உள்ளார். தடுப்பூசி போடாதவர்களை சிறையில் அடைக்க போவதில்லை என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதில்லை எனவும் கூறினார்.
வரும் 15ஆம் தேதி தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது. திரையரங்கிற்குள் நுழைய முடியாது எனக் கூறி அதிபர் தடுப்பூசி போடாதவர்கள் இழிவுபடுத்த போகிறேன் என குறிப்பிட்டார். தடுப்பூசி போடாதவர்களை தொந்தரவு செய்து கோபப்படுத்த விரும்புகிறேன் எனவும் அவர் கூறினார்.





