11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்..!
பீகாரில் 84 வயதான முதியவர் பதினோரு முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள சம்பவம் அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிஹார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஒரை கிராமத்தை சேர்ந்த 84 வயதான முதியவர் பிரம்மோத்திய மண்டல் என்பவர் பலமுறை தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களை கொண்டு 11 முறை தடுப்பூசி செலுத்துக்கொண்டது தெரியவந்தது.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி 11 ஆவது முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். 12 வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனது கிராமத்துக்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது அவர் சிக்கியுள்ளார்.
முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உண்மைதானா என்பது குறித்து விசாரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. அதில் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






