--- --:--:-- --

இனி துபாயில் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி..!

7

துபாய் நகராட்சி 500 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான அல் மம்சார் (Al Mamzar) கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடற்கரையை மே 5-ஆம் தேதி அன்று திறந்து வைத்துள்ளது. சுமார் 2.75 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம், சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஒரு சொர்க்கமாக மாறியுள்ளது.

 

தனியுரிமை மற்றும் பாதுகாப்பை விரும்பும் பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு கடற்கரை பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு பெண் உயிர்காக்கும் காவலர்கள் பணியில் இருப்பார்கள்.இரவு நேரத்திலும் நீச்சல் அடிக்க விரும்புபவர்களுக்காக 300 மீட்டர் நீளமுள்ள பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் பாதுகாப்பாக நீந்தலாம்.

 

5.5 கி.மீ நீளமுள்ள நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாலிபால், பேடல் (Padel) கோர்ட்டுகள் மற்றும் உடற்பயிற்சி மண்டலங்களும் உள்ளன.கயாக்கிங், ஜெட் ஸ்கையிங், பேடல் போட்டிங் மற்றும் ஃபிளைபோர்டிங் போன்ற நீர் விளையாட்டுகள் இங்கே தயார் நிலையில் உள்ளன.

 

பிராந்தியத்திலேயே முதன்முறையாக, கடல் நீரின் மேல் நடந்து சென்று துபாயின் அழகை ரசிக்கும் வகையில் மிதக்கும் நடைப்பாதை ‘Floating Walkway’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பார்வையிட்ட துபாய் நகராட்சித் தலைவர் ஹெச்.இ. என்ஜி. மர்வான் அகமது பின் கலிதா, இது துபாயின் கடற்கரைகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon