அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக வீடியோ வைரல்..!
கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக கோரி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் அய்யப்ப சுவாமிக்கு தனி சந்நிதானம் உள்ளது.
இந்த கோவிலில் 40 ஆண்டு கால பூஜையின்போது ஐயப்ப சாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஐயப்ப சாமி சிலை கண் திறந்ததாக கூறிய பக்தர் ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.





