காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றி வளைத்த போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக விஜயகுமார் தெரிவித்தார்.
அவர்களில் 2 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆனந்த்நாய்க் மாவட்டத்தில் நாப்கப், சகாபாத் பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதில் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே குளிர்காலத்தை பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





