--- --:--:-- --

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

3

ன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

 

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த வட தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon