--- --:--:-- --

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

3

கொரொனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், நகைக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

சந்தைகளில் 50 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்கும் என்றும் வார சந்தைகளுக்கு தடையும்விதிக்கப்பட்டுள்ளது.

 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காக்கள் அனைத்து வணிக வளாகங்கள் என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon