திருப்பூரில் அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக இரும்பு ராடு..!
திருப்பூரில் பராமரிக்கப்படாத அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக இரும்பு ராடை பொருத்தி இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து திருப்பூர் முதல் குமுளி வரை இயக்கப்படுகிறது.
இந்த பேருந்தின் கியருக்கு பதிலாக இரும்பு ராடை பொருத்தி ஓட்டுநர் பேருந்தை இயக்கி தாக கூறப்படுகிறது. கடந்த 50 நாட்களாக இரும்பு ராடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகத்திடம் கேட்டபோது கியரை யாரோ கழற்றி விட்டதால் நீளமான குழாய் பொருத்தி ஓட்டுநர் பேருந்தை இயக்கிய தாகவும் பேருந்து பணிமனையில் விட உள்ளதாகவும் தெரிவித்தார்.






