பள்ளி, கல்லூரிகளை திறக்க பரிந்துரை..!
கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கலாம் என்று 11 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மூன்றாவது கொரொனா அலை குறித்து வழிகாட்டல்களைவழங்க நியமிக்கப்பட்ட குழுவினர் 92 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் எடியூரப்பா தாக்கல் செய்தனர்.
அதில் படிப்படியாக கல்லூரிகளையும் பள்ளிகளையும் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .ஏற்கனவே மாணவர்கள் தங்கள் கல்வி பயிலும் காலத்தை பல மாதங்களாக இழந்து விட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
பள்ளிகள் திறப்பை மேலும் ஒட்டி போடுவது குழந்தைகளின் மீதான பாலியல் திருமணம், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது, குழந்தைகளை கடத்தி செல்வது போன்ற பல்வேறு கொடிய குற்றங்களுக்கு காரணமாகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.






