தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி..!
நாகர்கோவில் அருகே தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடியில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சங்கரன் புதூரை சேர்ந்த சுரேஷ் குமார் பஞ்சாயத்தில் குப்பை வண்டி ஓட்டுனராக பணிபுரிந்த இவருக்கு விற்பனையாளராக பணி புரிந்த வித்யா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வித்யாவிற்கு சுபாஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதால் சுரேசுக்கு அவரது வீட்டில் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் சுபாஷ் தன்னை கண்டித்ததால் சுரேஷ்குமாரை அழைத்துக்கொண்டு கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதிக்கு சென்று புதிதாக குடித்தனம் நடத்தி உள்ளார்.
இதுகுறித்து சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் மற்றும் நித்யாவை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து இருவரும் விஷம் அருந்தியுள்ளார்.
இதையடுத்து நாகர்கோவிலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார் கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தற்போது வித்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






