பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்..!
பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் முடக்கிய நிலையில் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்கி அவனைப் பின்தொடரும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை பதிவுகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.
காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் மதுரை இன்ஸ்டாகிராம் பக்கம் இருப்பது தெரியாமல் குறுஞ்செய்தி அனுப்பிய மதனின் ஆதரவாளர்களுக்கு இது போலீஸ். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாடாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை செய்தியை பதிலாக அனுப்பினார்.
காவல்துறை கண்காணிப்பில் அவரவர் வீடுகளுக்கு பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் சிலர் இனிமேல் பப்ஜி விளையாட மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்தனர்.






