வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்..!
ராமேஸ்வரத்தில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒன்பது பேரும் தவறான முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்ததால் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இபதிவின்றி செல்பவர்களை, அவசிய தேவைகள் என்று சுற்றி இருப்பவர்களையும் பிடிப்பதற்காக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர், சுற்றித் திரிந்த 83 பேரை பிடித்து கொரொனா பரிசோதனை செய்ததில் 9 பேருக்கு தொற்று உறுதியானது.
அந்த ஒன்பது பேருக்கும் தகவல் தொடர்பு கொண்டதில் அவர்கள் கொடுத்த மொபைல் எண் போலி என தெரியவந்தது. மேலும் முகவரியும் தவறு என தெரிய வந்ததை அடுத்து அந்த ஒன்பது பேரையும் பிடிக்கும் முயற்சியில் காவல் மற்றும் மருத்துவத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






