மே 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு 31ம் தேதிக்கு மாற்றம்..!
மே 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பிளஸ் 2 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட அதே நாட்களில் நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அடுத்த நாளே பொதுத்தேர்வுக்கு வருவது என்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கக்கூடிய காரணத்தினால் மூன்றாம் தேதி மட்டும் நடைபெற இருந்த தேர்வு தேதி 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.






