ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில் இருந்த மனித எலும்புக் கூடு..!
அடையாறு கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில் இருந்த மனித எலும்புக் கூட்டை எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் எலும்புக்கூட்டை எடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிடந்த இடத்தில் ஆய்வு செய்த தடயவியல் துறையினர் அது ஆண் ஒருவருடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விபரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினர்.
முன்னதாக வழக்கை கையில் எடுத்து விசாரிப்பதில் ரயில்வே போலீசாரும் அபிராமபுரம் போலீசாருக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. பின்னர் வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






